பொது நிர்வாக அமைச்சரின் விசேட அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையினை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி அமைப்புக்களின் தலைவர்களும் பொறுப்புடன் செயல்படுமாறு பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விசேட அறிவிப்பை விடுத்துள்ளார்.

குறித்த நடவடிக்கைகளை முன்னிறுத்தி இந்த காலகட்டத்தில் பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேவேளை குப்பைகளை அகற்றும் பணிகளும் சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்தோடு பொதுமக்களைப் போலவே உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் தற்போதுள்ள சட்டம் பொருந்தும் என்றும் பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

No comments: