கொரோனா வைரஸினால் உயிரிழந்த 07 ஆவது நபர் விபரங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் இன்று (08) உயிரிழந்த நபர் 44 வயதுடைய கல்கிஸை பகுதியை சேர்ந்த வைர வியாபாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஐ.டி.ச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார் எனவும் இவர் அண்மையில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments