கொழும்பு வெள்ளவத்தையில் 45 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை...!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிப தம்பதியினர் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின்  தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

குறித்த தம்பதியினர் தலைநகரின் 03 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும், அவர்களது கொரோனா தொற்று அறிகுறிகளை அடையாளம் காணாது அந்த தம்பதியின் இரு வைத்தியர்களான பேத்திகளே அவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

84 வயதுடைய குறித்த தம்பதியினர் சுமார் 45 பேருடன் நெருங்கி பழகியிருந்தார், இந்நிலையில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த கொழும்பு மாநகர சபையின் மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளின் போது,  அந்த வயோதிப தம்பதிகளின் இரு மகன்மார் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துவிட்டு கடந்த 14 ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இதுவரை உறுதியாகவில்லை.

இந்நிலையில் வைத்தியர்களான பேத்திகளால் உண்மைத் தண்மை மறைக்கப்பட்டு குறித்த வயோதிபத் தம்பதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனரா எனவும் ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை மருத்துவ அதிகாரிகள் கூறினர்.

எவ்வாறாயினும் தற்போது,  அந்த தம்பதி சிகிச்சைப் பெற்ற அனைத்து வைத்தியசாலைகளிலும் அவர்களை கவனித்த பணிக் குழுவினர்கள், வைத்தியர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments