மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது...!

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இருவர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இன்று (20) இதுவரை அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 304 பேரில் தற்போது 200 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 98 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: