தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த முடிவினால் நாடாளுமன்றம் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்தது - அகில

மார்ச் 2 அன்று கலைக்கப்பட்ட நாடாளுமன்றம், பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் 20 க்கு ஒத்திவைப்பது என்ற தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த முடிவினால் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வாயில் கருத்து தெரிவித்துள்ள அவர், தேர்தலை மீண்டும் ஒத்திவைத்ததால், அரசியலமைப்பின் படி நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும்.

தேர்தல்கள் நடத்தப்படாமல் ஜூன் 2 ஆம் திகதிக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படாவிட்டால் சபை மீண்டும் கூட்டப்படும் என்பது சில துறைசார் நிபுணர்களினால் நிரூபிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

"நாங்கள் தேர்தலை நடத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து விடுபட்ட பின்னரே நடத்தப்பட வேண்டும். எனவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அரசாங்கம் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் குருநாகலில் இதுவரை 13 சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன" என கூறினார்.

"தேர்தலை நடத்த வேண்டும் என முடிவு செய்வதற்கு முன்னர் அரசாங்கம் உண்மையில் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுக்கொண்டதா என்று நாங்கள் கேள்வி கேட்க விரும்புகிறோம்"

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் சில தொழிலாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய மறுக்கிறார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவர்களுக்கு அறிவித்ததையும் அகிலவிராஜ் காரியவசம் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments: