இலங்கையில் இந்திய இராணுவம் களமிறங்குமா? போலி என்கின்றது வட்டார தகவல்கள்...!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய இராணுவம் இலங்கை வரும் என வெளியான இந்திய ஊடகங்களின் அறிக்கை பொய்யானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தனி இராணுவ குழுக்களை அனுப்ப இந்திய இராணுவம் தயாராகி வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சினை மேற்கோளிட்டு செய்திகள் வெளியாகியிருந்தன.

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும் உதவி வழங்குவதற்கான இந்தியாவின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இது ஒரு போலியான தகவல் என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: