யாழில் நிவாரண உதவிகளுக்காக தனது சொந்த நிதியத்தில் இருந்து 196,000 ரூபாயினை வழங்கிய சி.வி.கே.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டம் பூராகவும் தொடர்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படிருக்கும் நிலையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுள்ளனர்.

இந்நிலையில்  அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் முகமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணை தலைவரும், வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தனது சொந்த நிதியத்தில் இருந்து ஒரு இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்கியுள்ளார்.

அதன்படி, இருபாலை தெற்கு கிராமத்திற்கு நாப்பதாயிரம் (40,000) ரூபாய் பெறுமதியான பொருட்கள்,தாவடி ஆசாரியார் வீதியில் உள்ள குறித்த ஒரு பகுதிக்கு நாப்பதாயிரம் (40,000) ரூபாய் பெருமதியான பொருட்கள்,

வலிகாமம் வடக்கின் குறித்த ஒரு பகுதிக்கு  நாப்பதாயிரம் (40,000) ரூபாய் பெருமதியான பொருட்கள்,கோண்டாவில் நாராயணன் பகுதிக்கு இருபதாயிரம் (20,000) ரூபாய் பெருமதியான பொருட்கள்,

கொட்டடி கற்குளம் பகுதிக்கு இருபதாயிரம் (20,000) ரூபாய் பெருமதியான பொருட்களை வழங்கிவைத்துள்ளதுடன் அடையாளப்படுத்த முடியாத சில குடும்பங்களுக்கு முப்பத்தாறாயிரம் (36,000)  ரூபாயினை பணமாக வழங்கி வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments