கொழும்பு,புத்தளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 176 ஆக உயர்ந்துள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்திலும் புத்தளத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பு - 44 புத்தளம் - 31 களுத்துறை - 25 கம்பஹா - 13 கண்டி - 07 யாழ்ப்பாணம் - 07 இரத்தினபுரி - 03 குருநாகல் - 02 மாத்தறை - 02 காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 176 பேரில் 03 வெளிநாட்டவர்கள் அடங்குவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 176 பேரில் தற்போது 137 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை 05 பேர் மரணமடைந்துள்ளனர்.

No comments: