34 ஆயிரத்து 500 பேர் கைது... இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 30 நாட்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் , ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக  34 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்துடன் , இவர்களிடமிருந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியவசிய தேவை இன்றி முறையற்று செயற்படுவதை தவிர்தத்துக் கொள்ளுமாறும் இதேவேளை இந்தக்காலப்பகுதியில் விநோத பயணங்கள், உற்சவங்கள், விநோத நிகழ்வுகள் மற்றும் யாத்திரைகள் ஆகியவற்றில் ஈடுப்பட வேண்டாம் என்றும் அவர் கர்த்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) வரையிலான 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 650  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 165  வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள ஒரு மாதகாலத்திற்குள் மாத்திரம் 34 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

No comments: