வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறத் தடை - டிரம்ப்பின் அதிரடி முடிவு

கொரோனா வைரஸின் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் இழந்த வேலைகளை மீண்டும் பெற விரும்பும் அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் முயற்சியில்அடுத்த 60 நாட்களுக்கு அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தடைவிதித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையர்கள் உட்பட எந்த வெளிநாட்டவர்களும் அமெரிக்காவில் தற்காலிகமாக குடியுரிமை பெற முடியாமல் போயுள்ளது.

கொரோனாவின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமாக அதிகரித்துள்ளமையினால் அமெரிக்காவில் பணிபுரியும் இலங்கையர்கள், இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேஷியர்கள் உள்பட பல்வேறு வெளிநாட்டினர் என இலட்சக்கணக்கானவர்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை அமெரிக்காவில் 8 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 45 ஆயிரம் பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இதனால் ஜனாதிபதி டிரம்ப் மீது அமெரிக்கர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments: