மக்களின் சடலங்களுக்கு மேல் தேர்தலை நடத்த நாம் விரும்பவில்லை - மஹிந்த தேசப்பிரிய

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அபாயம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சுதந்திரத்தை குறைத்துள்ளது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அடுத்து முந்தைய தேர்தல்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட திகதி இரத்துசெய்து, தேர்தல்கள் ஆணைக்குழு ஜூன் 20 ஐ பொதுத்தேர்தல் திகதியாக அறிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு தொற்றுநோய் தேர்தலை நடத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் COVID-19 ஐத் தவிர வேறு எதுவும் ஜூன் 20 வாக்கெடுப்பை நடத்த உகந்ததா என்பதை தீர்மானிக்க முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது அறிவிக்கப்பட்ட ஒரு திகதி கண்துடைப்பிற்கு என கூறமுடியாது. ஆணைக்குழுவில் விவாதிக்கப்பட்டபடி தேர்தலுக்கான திகதியை வெளியிட நாங்கள் நிர்பந்திக்கப்படுகிறோம். ஆனால் ஜூன் 2 தடையும் உள்ளது, அதாவது அரசியலமைப்பின் படி (மார்ச் 2 அன்று) கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். ஜூன் 2 க்கு முந்தைய இறுதி திகதி மே 30 ஆகும்.

ஜூன் 2 பதிலாக மே 30 அன்று தேர்தலை நடத்தினால், அதே வர்த்தமானியில் அந்த திகதியில் தேர்தலை நடத்த முடியாது என்று வெளியிட வேண்டும், இது ஜூன் 2 தடையை மீறுகிறது. இந்த விடயங்களைப் பற்றி நாங்கள் விரிவாக விவாதித்தோம், எனவே, சட்ட ஆலோசகர்கள் உட்பட மற்ற அதிகாரிகளுடன் ஆணைக்குழு முடிவு செய்தது, ஜூன் 2 ம் திகதி மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

மேலும் மே 30 என்பது சாத்தியமற்றது, ஏனென்றால் நாங்கள் தேர்தல் பணிகளைத் மே 20 முதல் தொடங்க வேண்டும், இதனால் தபால் மூல வாக்கு மற்றும் பிற விடயங்களை மே 11 க்கு முன்னர் முடிக்க முடியும், ஆனால் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு இதற்கு ஒரு தடையாக இருந்தது.

ஓகஸ்ட் 17 அல்லது செப்டம்பர் 1 அன்று அதை நடத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம், ஆனால் நாங்கள் உறுதியாக இருக்க முடியவில்லை. இவை தேர்தல் சட்டம் தொடர்பானது அல்ல. எனவே, பிரிவு 24 (1) வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் திகதியை அறிவிக்க முடிவு செய்தோம்.

ஜூன் 30 முதல் இன்னும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்குப் பின்னர் தேர்தலுக்கான மற்றொரு திகதியை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

பொதுமக்கள், அதிகாரிகள் அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களின் சடலங்களுக்கு மேல் பொது தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு விரும்பவில்லை. அவர்களின் பாதுகாப்பினையும் நாங்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.

தென்கொரியா தேர்தலை நடத்தியது என ஏன் இலங்கையால் நடத்த முடியாது என பலர் கேள்வியெழுப்புகின்றனர். ஆனால் தென்கொரியா தேர்தலுக்கு முன்னர் 39.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்காக மட்டுமே செலவு செய்தது என இணையத்தில் படித்தேன். நாங்கள் ஜனநாயகத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் தனிப்பட்ட நபர்களுக்காக அல்ல" என கூறினார்.

No comments: