மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடை...!

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அத்தியவசிய சேவைகளைத் தவிர மாவட்டங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் முகக் கவசம் அணியாத பயணிகள் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: