பொலிஸார் எச்சரித்தும் 13 ஆயிரம் பேர் இதுவரை கைது!

The-number-of-persons-arrested-for-violating-curfew-has-increased-to-13468
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இதுவரை 13,468 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் அத்தோடு 3,353 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில்  13,468 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 3,353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டத்தை மீற்றினால் பிணை வழங்கப்படாது மற்றும் வாகனங்கள் திரும்ப கையளிக்கப்படாது என பொலிஸார் எச்சரித்திருந்தபோதும்  கைதுகள் இடமபெற்றுள்ளன.

No comments: