மேல் மாகாணத்தில் மட்டும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்...!

கொரோனா வைரஸ் நாட்டின் 09 மாகாணங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி மேல் மாகாணத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கொழும்பில் 120 பேரும் களுத்துறையில் 58 பேரும் கம்பஹாவில் 33 பேரும் கொரோன வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 330 பேர் காணப்பட்டுள்ள நிலையில் 105 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் மேல்மாகாணத்தை தவிர வடமேல் மாகாணத்தில் புத்தளத்தில் 35 பேரும் குருநாகலில் 02 பேரும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 16 பேரும் வவுனியாவில் ஒருவரும் மத்திய மாகாணம் கண்டியில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சப்ரகமுவா மாகாணத்தில் இரத்தினபுரியில் 5 பேரும், கேகாலையில் 4 பேரும், தென் மாகாணத்தில் மாத்தறையில் 02 பேரும் காலியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் பதுளையில் ஒருவரும் கிழக்கு மாகாணத்தில் அப்பாறையில் 02 பேரும் மட்டக்களப்பில் ஒருவரும் வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 38 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

No comments: