கொரோனா அச்சம் - கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட தபால் பொதிகளை ஏற்க யாழ் ஊழியர்கள் மறுப்பு!

கொழும்பு தபால் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட தபால் பொதிகளினால், ஊழியர்களிடையே அச்சம், தபால்பொதிகளை உடைக்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து நேற்று (புதன்கிழமை) இரவு ஒரு தொகை தபால்கள் யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. அந்த பொதிகளை இன்று பொது மக்களுக்கு சென்று விநியோகிக்குமாறு நிர்வாகத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை ஏற்றுக்கொள்ளாது, ஊழியர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

அந்த பொதிகளை, மக்கள் மத்தியில் விநியோகம் செய்யுமாறு தபால் திணைக்கள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கொண்டுவரப்பட்ட பொதிகள், சுகாதார முறைப்படி கொண்டு வரப்படவில்லை. யார் கொண்டு வந்தது, கொண்டு வரப்பட்ட பொதிகள் அனைத்தும், கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கொண்டு வந்திருந்தால், தமக்கும் அந்த பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்து, பொதிகளை திறந்து விநியோகம் செய்ய மறுத்தனர்.

அதேநேரம், 150 ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுவதனால், 20 பேருக்கான முககவசம் மற்றும் கையுரைகள் வழங்கப்பட்டதாகவும், தபால் திணைக்களத்தில், சுகாதாரத்தைப் பேணுவதற்கான எந்த அடிப்படை வசதிகளையும் நிர்வாகம் செய்யவில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால், தற்போதுள்ள நிலைமையில், மருந்து வகைகள் தவிர்ந்த ஏனைய பொதிகளை எவ்வாறு மக்களுக்கு விநியோகம் செய்ய முடியுமென்றும், ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தன் பின்னர், மக்களுக்கான பொதிகளை விநியோகம் செய்யலாம்.

ஆனால், கொரோனா தொற்றிற்கான அச்சம் மேலும் காணப்படுவதனால், ஒவ்வொரு வீடுகளிற்கும் சென்று, பொதிகளை விநியோகம் செய்யும் போது, அவர்களிடமிருந்தும், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதனால், நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும், கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட பொதிகளை உரிய சுகாதார முறைகளில் தொற்று நீக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments: