ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறுபாண்மை நலனுக்காக பல வழக்குகளில் முன்னிலையாகி வாதாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தமை மற்றும் அவரது தொழில் சார்ந்த சட்டரீதியான செயற்பாட்டை தடுக்கும் நோக்கில் தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் பல குடியியல் வழக்கில் மட்டுமே நீதிமன்றில் முன்னிலையானவர் என்றும் வேறு எந்த நபர்களுடனும் தொடர்புடையவர்கள் இல்லை என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே சட்டரீதியற்ற முறையற்ற நீதிக்கு புறம்பான கைது மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பாக உடனடியாக இடைக்கால தடை உத்தரவு வேண்டும் என்றும் அவரை எந்த பிணை நிபந்தனையின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மனுவின் பிரதிவாதியாக பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபரின் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...
மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...
- திங்கட்கிழமை ஊரடங்கு தளரும்... இரவு வேளையில் மட்டும் அமுலாகும்..! அரசாங்கம் தீர்மானம்
- "மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை சொந்த அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது"
- போலி செய்திகளை வெளியிட்ட 17 பேர் கைது...!
- கடந்த 24 மணிநேரத்தில் 6 பேருக்கு கொரோனா, 9 பேர் குணமடைந்தனர்...!
0 Comments