சீனாவின் அன்பளிப்பு - மருத்துவ பொருட்களுடன் வந்திறங்கிய விமானம்!

சீனாவில் இருந்து 16 மெட்ரிக் தொன் மருத்துவ உபகரணங்களை ஏந்திய விமானம் நேற்று (17) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது.

ஷாங்காயில் இருந்து சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.யு -231 இரவு 7.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் போன்றவை சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வந்திறங்கிய 16 மெட்ரிக் தொன் மருத்துவ உபகரணங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இதேவேளை மருத்துவ உபகரணங்களை கையளித்த பின்னர் இந்த விமானம் நேற்று இரவு 8.20 மணியளவில் 170 பயணிகளுடன் ஷாங்காய் நோக்கி புறப்பட்டது.

மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...

Post a Comment

0 Comments