கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 218 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை நாடுமுழுவதில் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 117 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: