Tuesday, April 14, 2020

25 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 26,600 பேர் கைது!

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரையான 25 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய  26,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 6600 மேற்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்ய நேற்று (13) மாலை 6 மணி முதல் இன்று (14) மாலை​ 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலப்பகுதியான இந்த காலப்பகுதியில் மக்களை பாதுகாப்பதற்காக 45,000 இற்கும்  மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வேறு நாட்களை போன்று வீதியில் நடமாடவோ அல்லது அனாவசியமான முறையில் சுற்றித்திரியவோ வேண்டாமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.