கொரோனா வைரஸ் - மேலும் இரு இலங்கையர்கள் பிரித்தானியாவில் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் வசிக்கும் 72 மற்றும் 62 வயதுடைய மேலும் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவுஸ்ரேலியாவில் ஒரு இலங்கையரும், இங்கிலாந்தில் 02 இலங்கையர்களும், சுவிட்சர்லாந்தில் ஒருவரும் உயிரிழந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இதேவேளை கடந்த 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் – மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

No comments: