வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் நீடிப்பு.... ஊரடங்கு தொடர்பான அறிவிப்பும் வெளியானது...!

அரச மற்றும் தனியார் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமூகமளிக்காமல் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறையிலிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அறிவிப்பை இன்னும் சற்றுநேரத்தில் பதிவிடுகின்றோம்.. தொடர்ந்தும் இணைந்திருங்கள்

No comments: