அட்லியின் அடுத்த பட டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். மூன்றுமே வசூல் ரீதியில் வெற்றிப் படங்கள் என்பதால் தற்போது அவர் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ’ஏ பார் ஆப்பிள்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அட்லி அதன் மூலம் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரித்தார். ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான இந்த படத்தை நடிகவேல் எம் ஆர் ராதாவின் பேரன் lke இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’அந்தகாரம்’ என்ற படத்தை இயக்குனர் அட்லி தயாரித்து வருகிறார். இந்த படத்தை விக்னேஷ் ராஜன் என்பவர் இயக்கி வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வரும் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிட உள்ளதாக அட்லி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

No comments: