தூற்றும் செயற்பாட்டில் அரசாங்கம் - தற்போதைய நிலைமையை விளக்கி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐ.தே.க. கடிதம்

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்க தரப்பினர் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி மக்களுக்கு ஆற்றும் உரை மற்றும் அமைச்சரவை தீர்மானங்களின்போது எதிர்கட்சிகளை தூற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக  ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடிதம் எழுத்தியுள்ளதுடன், இந்த நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது நெருக்கடி நிலையிலும் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸிக்ரு எதிராக போராடும் நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டினை கூட அரசியல் ரீதியாக இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்றது என குற்றம் சாட்டியுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்தால் மக்கள் மத்தியில் அரசியல் கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்றும் இருக்கும்போது அரச தரப்பு கொரோனா வைரஸை தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்துகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன பேசிய விடயடத்தை சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசிய கட்சி, தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அவர் ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டார் என்றும் விமர்சித்துள்ளது.

எனவே இவ்வாறான குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சுயாதீனமாக செயற்படும் நிறுவனம் என்ற ரீதியில் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

No comments: