தபால் நிலையங்கள் அடுத்த வாரம் முதல் திறப்பு

தபால் நிலையங்கள் எதிர்வரும் மே 4 ஆம் திகதி முதல் சாதாரண அலுவலக சேவைகளுக்காக திறக்கப்படவுள்ளன.

கொடுப்பனவுகள் மற்றும் ஊதியம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

இதற்கிணங்க, முதியோர்களுக்கான கொடுப்பனவு விவசாயிகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட ஓய்வூதிய கொடுப்பனவு தபால் அலுவலகங்களினூடாக பெற்றுக்கொடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: