ஊரடங்கினால் வேறு மாவட்டங்களுக்கு முடங்கி கிடப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு - முக்கிய அறிவிப்பு...

ஊரடங்கு நடைமுறையால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ள மக்கள் தமது விபரங்களை தெரியப்படுத்துமிடத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.

அந்தவகையில் மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப விரும்புபவர்கள் தமது முழுப் பெயர் -
அடையாள அட்டை இலக்கம் - 
திரும்ப வேண்டிய சொந்த முகவரி - 
சொந்த பிரதேச செயலக பிரிவு -
தொலைபேசி இலக்கம் -
தற்போது தங்கியுள்ள முகவரி -  உள்ளிட்ட விபரங்களை  திரட்டி கீழக்காணும் 0777 781 891 என்ற வடசப் இலக்கத்திற்கு அனுப்பும் பட்சத்தில் அதற்காதன தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Post a Comment

0 Comments