கொரோனாவினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு சீனாவில் அஞ்சலி!

நாடு முழுவதும் அரை கொடியில் தேசியக் கொடியை பறக்கவிட்டு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு சீனாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்தவகையில் இன்று (04) அந்நாட்டு நேரப்படி 10 மணிக்கு மருத்துவர்கள் உட்பட கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பீய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிற சீனத் தலைவர்கள் தேசியக் கொடிக்கு முன்னால்மௌன அஞ்சலி செலுத்தினர் என்றும் துக்கத்தின் அடையாளமாக வெள்ளை மலர்களை சட்டையில் அணிந்திருந்தனர் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய சுகாதார ஆணைகுழு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் 81,639 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளம் கண்பட்டுள்ளதுடன் 3,300 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் மத்திய மாகாணமான ஹூபேயில் தோன்றிய குறித்த நோய் தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 76,755 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: