கொழும்பில் மட்டும் 100 ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று - மாவட்ட ரீதியான முழு விபரம் இதோ

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் இதுவரை 110 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு இன்று (21) காலை வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 309 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 100 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் காலை 10 மணி வரையான 304 பேர் விபரம் அடங்கிய மாவட்ட ரீதியான தகவல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது 

அதன்படி கொழும்பில் 110 பேர், களுத்துறை 45, புத்தளம் 35, கம்பஹா 32, யாழ்ப்பாணம் 16, கண்டி, 07, இரத்தினபுரியில் 5 பேரும் கேகாலையில் 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை குருநாகல், மாத்தறை மற்றும் கல்முனை பகுதிகளில் தலா 02 பேரும் காலி, மட்டக்களப்பு, பதுளை மற்றும் வவுனியாவில் தலா ஒருவரும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 38 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

No comments: