மேலும் ஒருவருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கை மேலும் உயர்வு

கொரோனா வைரஸ்  தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று மட்டும் 06 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட நோயாளி இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு இதுவரை 310 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்றும் அதன்படி இலங்கையில் தற்போது வரை 102 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: