நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகின்றது - ஊரடங்கு தொடர்பிலான அறிவிப்பு

கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி தவிர்ந்த நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு மீண்டும்  பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும்  என்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் - விபரம் இதோ

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments