தேர்தலுக்கான திகதியை அறிவிப்பது ஜனாதிபதியின் கடமை அல்ல

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒரு திகதியை அறிவிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமையாகும் என்றும் ஜனாதிபதியின் கடமை அதுவல்ல ஏறணும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ஜூன் 2 ஆம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படுமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்னும் நேரம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருதினால், அவ்வாறு நடத்தவும் ஒரு திகதியை அவர் அறிவிக்க வேண்டும் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments: