இந்தோனேஷியாவில் மேலும் 316 பேருக்கு கொரோனா வைரஸ் 26 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் இன்று (13) கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான மேலும் 316 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நாடடில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 4,557 ஆக அதிகரித்துள்ளது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான 26 புதிய இறப்புகளும் நிகழ்ந்துள்ளன என்றும் மொத்த இறப்பு எண்ணிக்கை 399 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் தலைமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

No comments: