மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்...!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், 138 தற்போதும் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பெற்றுவருகின்றனர். 42 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

228 பேர் சந்தேகத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெறுகின்றனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: