தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து இன்று யாரும் விடுவிக்க மாட்டார்கள்

தனிமைப்படுத்ல் காலத்தை முடித்த 33 பேர் நாளை (09) விடுவிக்கப்படுவார்கள் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து இன்று யாரும் விடுவிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 14 நாள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்த 3,415 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை 44 வெளிநாட்டினர் உட்பட 1,262 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: