03ஆம் திகதி வரை நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி வரை நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படும்  என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

பிரதமர் மோடியினால் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு, இன்றுடன் நிறைவுக்கு வரும் நிலையில் மேலும் அது நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவினால் 339 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு, அங்கு இது வரை 10,453 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: