இன்று சிவப்பு நிறமாக காட்சியளிக்கவிருக்கும் தாமரை கோபுரம்!


கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைத்து தொழிலாளர்களையும் பாராட்டும் விதமாக கொழும்பு தாமரை கோபுரத்தில் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்பட உள்ளன.

அந்தவகையில் இன்று (சனிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு கொழும்பு தாமரை கோபுரத்தில் சிவப்பு மற்றும் கருப்பொருளுடன் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அயராது உழைத்து வரும் மருத்துவத் தொழிலாளர்கள், பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆற்றிய சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதேவேளை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: