கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 198 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 54 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 165 பேர் சந்தேகத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: