தனிமைப்படுத்தப்பட்டார் ஷராதா ஸ்ரீநாத்

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஷராதா ஸ்ரீநாத் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சென்னை, பெங்களூரு உள்பட ஒருசில நகரங்களுக்கு படப்பிடிப்புக்காக விமானத்தில் சென்று வந்தார்.

இந்த நிலையில் அவர் பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஷராதா ஸ்ரீநாத் வீட்டிற்கு வந்து அவரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்

சுகாதார துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று நடிகை ஷராதா ஸ்ரீநாத் தற்போது தனது வீட்டிலேயே நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளார் இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

No comments: