கொரோனா வைரஸை முற்றாக ஒழிக்கும் வரை தேர்தலை நடத்த முடியாது என்கின்றது ஜே.வி.பி.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை முற்றாக ஒழிக்காமல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, தேர்தல்களை நடத்துவதற்கு இது உகந்த நேரமா என்பதை உறுதிசெய்வது ஜனாதிபதியுடையதும் அரசாங்கத்தினதும் பொறுப்பு என கூறினார்.

மேலும் தேர்தலை நடத்துவதற்கு முன்பு கொரோனா வைரஸ் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் ஜூன் 20 க்குள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை கொரோனா வரைஸ் தாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்காக, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி கோவிட் -19 க்கு எதிரான செயற்பாடுகளுக்காக பணம் ஒதுக்க வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவாவது ஜனாதிபதி ஒரு வழியை உருவாக்கி பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments: