மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு இன்று (16) மாலை நேர நிலவரப்படி எந்த ஒரு நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: