உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவி தொடர்பாக மறுபரிசீலனை செய்ய ட்ரம்பிறகு ரணில் வலியுறுத்து...!

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவியை நிறுத்தி வைப்பதற்கான தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ட்ரம்பிற்கு எழுதிய கடிதத்தில், இதுபோன்ற முடிவுகள் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள திட்டங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தானம் தொடர்பில் அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை எனவே இவை குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் தலைமை ஏற்று உலக நாடுகளை வழிநடத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே COVID-19 தொற்றுநோய் உருவாக்கிய கடுமையான தாக்கத்தை கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அக்கடிதத்தில் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: