உயிரிழந்தவரின் மருமகனுக்கும் பேரனுக்கும் கொரோனா தொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஐ எட்டியது...!

கொரோனா வைரஸ்  தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கவர்களில் இருவர் நேற்று இறந்த கொரோனா வைரஸ் நோயாளியின் மருமகனும் பேரனும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த மருதானையைச் சேர்ந்தவருடன் தொடர்பை பேணிய 300 பேர் புனானை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments: