கொரோனா வைரஸ் - நோயாளிகளின் மாவட்ட ரீதியான நிலவரம் இதோ

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 214 நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் மாவட்ட ரீதியாக காலை நேர (210 பேர் நிலவரம்) நிலவரப்படி, கொழும்பில் 45 பேரும், கழுத்துறையில் 37, புத்தளத்தில் 34, கம்பஹாவில் 24 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 7 பேரும் இரத்தினபுரியில் 5, குருநாகல், மாத்தறை, கல்முனை, கேகாலையில் தலா 02 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு காலி, மட்டக்களப்பு மற்றும் பதுளையில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு நிலையங்களில் 37 பேரும் வெளிநாட்டவர்கள் 03 பேர் அடங்கலாக 210 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட 214 பேரில் 56 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: