நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக, நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி தொடக்கம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் பொதுமக்களை வீட்டினுள்ளேயே இருப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிறப்பிக்கப்பட்டுள்ள இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 25,031 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6426 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: