கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதற்கமைய 50 பேர் இதுவரை முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 190 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தற்போது 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 இற்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments