12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்....! பிரதேச சபை உறுப்பினரை தூக்கியது பொதுஜன பெரமுன...!


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஆர். ரணவீரவை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விலக்கியுள்ளது.

அந்தவகையில் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் பக்கச்சார்பற்ற மற்றும் விரைவான விசாரணையை நடத்துமாறு அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய செயல்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்படக்கூடாது, விரைவான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த அதிகாரிகளை வலியுறுத்தும் என அக்கட்சியின் உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் "இந்த விசாரணையில் எந்த அரசியல் தலையீடும் அல்லது அந்த விஷயத்தில் வேறு எந்த விசாரணையும் இருக்காது. இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, தற்போது வரை சந்தேக நபர்கள் அனைவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்" என கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதுடையவர் என்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: