கடந்த 24 மணிநேரத்தில் 16 பேருக்கு கொரோனா - விபரம் உள்ளே

இன்று மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆக  அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 14 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 09 கடற்படை, தனிமைப்படுத்தப்பட்ட 6 பேர் மற்றும் மேலும் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மேலும் 15 பேர் பூரண குணம் அடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 154 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

No comments: