நாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் - நோயாளிகளின் விபரம்

நாட்டில் இன்றுமட்டும் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் குவைத்தில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது தொற்று உறுதியானவர்களில் 479 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

No comments: