கொரோனா வைரஸ் - மேலும் 27 பேர் பூரண சுகம் பெற்றனர்

நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 27 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து 781 பேர் வெளியேறியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1,558 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 767 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: