இலங்கையில் கொரோனாவினால் சற்றுமுன்னர் 08 ஆவது மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 08 ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹோமகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருநாகல் பகுதியை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்று மட்டும் 03 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 07 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.

No comments: