நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியாவில் ஊரடங்கு

நுவரெலியா மாவட்டத்திற்கு இன்று (29) நள்ளிரவு 12 முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: